• August 22, 2025
  • NewsEditor
  • 0

திரு​வனந்​த​புரம்: மலை​யாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் நேற்று முன்​தினம் கூறுகையில், “சமூக ஊடகம் மூலம் என்​னுடன் நட்​புடன் பழகிய அரசி​யல்​வா​தி ஒருவர் எனக்கு ஆபாச​மான செய்​தி​களை அனுப்​பி, ஓட்​டல் அறைக்கு அழைத்​தார். காங்​கிரஸில் இருப்​பவர்​கள் உட்பட மேலும் பல பெண்​களுக்கு இது​போன்ற அனுபவம் ஏற்​பட்​டுள்​ளது” என்று குற்றம்சாட்டினார்.

அரசி​யல்​வா​தி​யின் பெயரை வெளி​யிட அவர் மறுத்​து​விட்​டார். என்​றாலும் அது பாலக்​காடு எம்​எல்​ஏ​வும் மாநில இளைஞர் காங்​கிரஸ் தலை​வரு​மான ராகுல் தான் என ஊகங்​கள் வெளி​யாகின. கடந்த ஆண்டு பாலக்​காடு இடைத்​தேர்​தலில் வென்ற ராகுல் தொடக்​கத்​தில் இந்​தப் புகாருக்கு பதில் அளிக்​க​வில்​லை. இந்​நிலை​யில் மாநில இளைஞர் காங்​கிரஸ் தலை​வர் பதவியை ராகுல் மம்​கூடத்​தில் நேற்று ராஜி​னாமா செய்​தார். எனினும் பாலக்​காடு எம்​எல்ஏ பதவி​யில் அவர் தொடர்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *