
புதுடெல்லி: சென்ற 2024-25-ம் நிதியாண்டில் தேவையை விட அதிக ரத்தம் சேகரிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: 2024-25-ம் ஆண்டில், இந்தியா 1,46,01,147 யூனிட் ரத்தத்தை சேகரித்தது. இது ஆண்டுத் தேவையான 14.6 மில்லியன் யூனிட்களை விட அதிகமாகும். மேலும் 2023-ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட 1,26,95,363 யூனிட் ரத்தத்தை விட 15% அதிகமாகும்.