
சேலம்/தருமபுரி: மேட்டூர் அணை நடப்பாண்டில் 5-வது முறையாக நிரம்பியது. நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அணையில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை தொடர்கிறது.
நடப்பாண்டில் முதல்முறையாக, ஜூன் 29-ல் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டி, நிரம்பியது. டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர் மட்டம் குறைவதும், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது, நீர்மட்டம் உயருவதுமாக இருக்கிறது.