
‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் எழுதி இயக்குகிறார். இதில் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே ஜி எஃப் படங்களுக்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும் அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக ஐஸ்வர்யா கல்பாத்தியும் உள்ளனர். இந்நிறுவனம் தயாரிக்கும் 28 -வது படம் இது. இதன் பூஜை சென்னையில் நேற்று நடந்தது.