• August 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிரதமர், முதல்​வர், அமைச்​சர்​கள் பதவிப்​பறிப்பு மசோ​தாவுக்கு காங்​கிரஸ் மூத்த தலை​வரும், முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான சசி தரூர் ஆதரவு தெரி​வித்​துள்​ளார். பிரதமர், முதல்​வர், அமைச்​சர்​கள் பதவிப்​பறிப்பு குறித்த மசோதா நேற்று மக்களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோதா தொடர்​பாக காங்​கிரஸ் பொதுச் செயலரும், எம்​.பி.​யு​மான பிரி​யங்கா காந்தி, கொடூர​மான மசோதா என்று விமர்​சித்​துள்​ளார். ஆனால் மசோ​தாவுக்கு காங்​கிரஸ் மூத்த தலை​வர்​ சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்​து, அவர் மேலும் கூறும்​போது, ‘‘நீங்​கள் 30 நாள்​கள் சிறை​யில் வைக்​கப்​பட்​டால், அமைச்​ச​ராக தொடர முடி​யு​மா? இது பொது அறிவு சார்ந்த ஒன்​று. இதில் தவறு இருப்​ப​தாக எது​வும் எனக்​குத் தெரிய​வில்​லை. இந்த மசோ​தாவை நாடாளு​மன்​றக் குழு ஆய்​வுக்கு அனுப்​புவது நல்ல விஷ​யம்​தான். குழு​வுக்​குள் விவாதம் நடத்​து​வது​தான் ஜனநாயகத்​துக்கு நல்​லது. ஆகை​யால், விவாதத்தை நடத்​து​வோம்’’ என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *