• August 20, 2025
  • NewsEditor
  • 0

மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி

டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலையில் தனது வீட்டில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியான ஜன் சன்வாய் என்ற நிகழ்ச்சியில் மக்களிடம் குறை கேட்டல் மற்றும் மனுக்களை வாங்கிக்கொண்டிருந்தார்.

அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தபோது 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பேப்பருடன் முதல்வர் ரேகாவை அனுகினார்.

முதல்வர் மீது தாக்குதல்

அவர் ரேகாவிடம் தன்னிடம் இருந்த பேப்பர்களை கொடுத்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் திடீரென அந்த நபர் ரேகாவை அடித்துவிட்டார். அதோடு அவரை முடியை பிடித்து இழுத்து தாக்கி கண்ட படி திட்டினார்.

இதனால் அங்கு நின்ற பாதுகாவலர்கள் விரைந்து செயல்பட்டு அந்த நபரை கைது செய்தனர். இதில் காயம் அடைந்த முதல்வர் ரேகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தாக்கிய நபர் யார்?

தாக்கிய நபரின் கையில் ஏதோ கோர்ட் ஆவணங்கள் இருந்தது. அதோடு அந்த நபர் தன்னிடம் இருந்த ஏதோ ஒரு கனமான பொருளை முதல்வர் ரேகா மீது தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ரேகா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் முதல்வர் ரேகாவின் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவரை தாக்கிய நபரை கைது செய்து போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென முதல்வர் ரேகாவை மர்ம நபர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா
டெல்லி முதல்வர் ரேகா குப்தா

பா.ஜ.க கண்டனம்

இச்செயலை டெல்லி பா.ஜ.க தலைவர் வீரேந்திரா கடுமையாக கண்டித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “குறை கேட்பு கூட்டத்தில் ஒருவர் முதல்வரிடம் சில பேப்பர்களை கொடுத்தார். பின்னர் முதல்வரின் கையை பிடித்து இழுத்துள்ளார். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அங்கிருந்த டேபிள் மீது முதல்வர் இடித்துக்கொண்டுள்ளார். முதல்வரை அந்த நபர் அடிக்கவில்லை. முதல்வரை இப்போதுதான் சந்தித்து பேசினேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரை தாக்கிய நபர் பெண் என்று நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் தாக்கப்பட்டதில் சதி இருப்பதாகவும், முதல்வர் களத்தில் இறங்கி வேலை செய்வது பிடிக்காமல் எதிரிகள் இது போன்ற செயலில் ஈடுபட்டு இருப்பதாக மாநில அமைச்சர் மஜிந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Delhi CM Rekha
Delhi CM Rekha

ஆம் ஆத்மி கண்டனம்

முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியில் முதல்வர் தாக்கப்பட்டார் என்றும் தாக்கிய நபரை பிடித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் தாக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *