
நாமக்கல்: அர்ச்சகர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத்தில் நேற்று சிசிடிவி கேமராவை இந்து சமய அறநிலையத் துறையினர் பொருத்தினர். திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பொருந்திய கோயிலின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கு கோயில் அர்ச்சகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த ஜூன் மாதம் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தி கோயிலைச் சுற்றி வந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.