• August 20, 2025
  • NewsEditor
  • 0

மேற்கு ஆப்பிரிக்கா நாடான புர்கினா ஃபாசோவை சேர்ந்த, அலினோ ஃபாசோ. ஜனவரி 2025-ல் மற்றொரு மேற்கு ஆப்பிரிக்கா நாடான ஐவரி நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டிற்காகக் கைது செய்யப்பட்டு அபிஜான் நகரில் உள்ள ராணுவ அகாடமி சிறையில் அடைக்கப்பட்டார்.

அலினோ ஃபாசோ

இவர் ஜூலை 26, 2025 அன்று சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக ஐவரி கோஸ்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். எந்தவொரு காரணமும் இன்றி அலினோ ஃபாசோ தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்த ஐவரி கோஸ்டின் கூற்றை முழுமையாக புர்கினா ஃபாசோ அரசாங்கமும், மக்களும் நிராகரிக்கின்றனர்.

மேலும், அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் போராடி வருகின்றனர்.

யார் இந்த அலினோ ஃபாசோ?

புர்கினா ஃபாசோவை பூர்வீகமாக கொண்ட அலினோ ஃபாசோ ஒரு சமூக ஊடக பிரபலம். அவரது இயற்பெயர் அலைன் ட்ரோரே. இவர் சமூக ஊடகங்களில் கிட்டத்தட்ட 4,00,000 க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை வைத்திருக்கிறார். தன்னை பின்தொடர்பவர்களை தவறாக வழிநடத்தாமல் அரசியல் ஊழல், அதிகாரத் தவறுகள் போன்றவற்றை வெளிப்படையாக, எளிமையான மொழிநடையில் மிகவும் ஈர்ப்பது போல எடுத்துக் கூறுவார்.

அலினோ ஃபாசோ
அலினோ ஃபாசோ

அதனால், ட்ரோரேவை இளைஞர்கள் அதிகளவில் பின்தொடர்ந்தனர். சில நேரங்களில் புர்கினா ஃபாசோ அரசை மட்டுமல்ல, அண்டை நாடுகளின் (குறிப்பாக ஐவரி) அரசியல் சூழ்நிலைகளையும் விமர்சித்திருக்கிறார்.

பலர் இவரை, ‘இளம் தலைமுறையின் தாமஸ் சங்காரா (புர்கினா ஃபாசோவின் புரட்சியாளர்) குரல்’ என்று அழைத்தனர். 2021-ம் ஆண்டு ட்ரோரே தனது குடும்பத்துடன் புர்கினா ஃபாசோவிலிருந்து ஐவரி கோஸ்டுக்கு குடிபெயர்ந்தார். அங்கு இருந்தபோது, அவர் ஒரு உணவகத்தை வைத்திருந்தார். டிஜிட்டல் செயல்பாட்டிற்கு அப்பால், இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு உதவி செய்ய ட்ரோரே ஏற்பாடு செய்து வந்துள்ளார். இந்நிலையில் தான், அவரை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி சிறையில் அடைத்தது ஐவரி கோஸ்ட் அரசாங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *