• August 20, 2025
  • NewsEditor
  • 0

தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்தும், ‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்’ என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் வாசலில் 13 நாட்களாக போராடினர் தூய்மை பணியாளர்கள்.

போராடியவர்களை காவல்துறையை வைத்து அப்புறப்படுத்தியது திமுக அரசு.

விசிக தலைவர் திருமாவளவன் கருத்து

இச்சூழலில், ‘குப்பை அள்ளும் தொழிலை நிரந்தரப்படுத்தி அதையே நீங்கள் காலம் முழுக்க செய்து கொண்டிருங்கள் எனச் சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. குப்பை அள்ளும் தொழிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதுதான் நம்முடைய போராட்டம். ‘பணி நிரந்திரம் செய்யுங்கள்’ என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்கிற கருத்துக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. ‘பணி நிரந்தரம் செய்யக் கூடாது’ என்பதுதான் சரியான கருத்து. அதிலிருந்து அவர்களை மீட்பதுதான் சமூகநீதி’ எனப் பேசி சர்ச்சையை பற்ற வைத்திருக்கிறார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.

சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கருத்து

இதற்கு சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் “தோழர் திருமாவளவன் கூறும் கருத்து சரியானது அல்ல, பணி நிரந்தரம், அதில் கிடைக்கக்கூடிய ஊதியம், பணிப் பாதுகாப்பு அதைத் தொடர்ந்து வரக்கூடிய பல்வேறு சலுகைகள் என இவையனைத்தும் சேர்ந்து, அடுத்து தலைமுறையை இந்த பணியில் இருந்து விடுவித்து, உயர்கல்வி பெறுவதற்கும், வேறு பணிகளுக்கும் செல்ல நல்ல வாய்ப்பை அக்குடும்பங்களுக்கு ஏற்படுத்துகிறது” என்றார்.

ஆளூர் ஷாநவாஸ் பதில்

தூய்மை பணியாளர் பணி நிரந்த விவகாரம் உள்பட நடப்பு அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *