
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’.
விஜயகாந்தின் 100வது திரைப்படமான இத்திரைப்படம் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
இப்படத்துக்குப் பிறகே ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று அழைக்கப்பட்டார். இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையொட்டி, ஃபிலிமில் எடுக்கப்பட்ட அப்படம் டிஜிட்டலில் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 19) செய்தியாளர்களைச் சந்தித்து ஆர்.கே செல்வமணி பேசியிருக்கிறார்.
“ஒருவர் ரூ.100 கோடி சம்பளம் வாங்கினால் உடனே எனக்கு ரூ.100 கோடி சம்பளம் வேண்டும் என்று நினைப்பது, அந்த படம் ரூ.1000 கோடி வசூலித்து விட்டதென்றால் உடனே என் படமும் ரூ.1000 கோடி வசூலிக்க வேண்டும் என்று நினைப்பது. இந்த நோய்தான் தற்போது தமிழ் சினிமாவைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.
என் படம் ஓடவேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் அந்த படத்தைத் தாண்டி ஓடவேண்டும் என்று நினைப்பது சரியான போட்டியல்ல. ரசிகர்களுக்கு நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று தான் நாம் நினைக்க வேண்டும். ஒரு நல்ல படம் நிறைய வசூல் செய்வது வேறு.

ஆனால் ஒரு மோசமான படம் அதிகம் வசூல் செய்வதால் அது நல்ல படம் ஆகிவிடாது. ‘கேப்டன் பிரபாகரன்’ அப்போது வெளியானபோது வெறும் 90 திரைகளில்தான் வெளியானது. ஆனால் இப்போது 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…