• August 20, 2025
  • NewsEditor
  • 0

பிரபல நகைச்சுவை நடிகர் சங்க்கி பாண்டே மற்றும் பாவனா பாண்டே தம்பதிகளின் மூத்த மகள், அனன்யா பாண்டே இன்று பாலிவுட்டில் இளம் நட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

2019-ஆம் ஆண்டு ‘Student of the Year 2’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான Pati Patni Aur Woh படத்திலும் சிறப்பாக நடித்து, இந்த இரு படங்களுக்காகவும் சிறந்த அறிமுக நடிகைக்கான ‘Filmfare’ விருதுகளை வாங்கினார். அதனைத் தொடர்ந்து ‘Khaali Peeli (2020), Gehraiyaan (2022)’, ‘Dream Girl 2 (2023)’, ‘liger’ போன்ற படங்களில் நடித்தார்.

அனன்யா பாண்டே

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனநல ஆரோக்கியம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் அனன்யா, “மனநலம் நன்றாக இருந்தால்தான் நம் தோற்றமும், முகமும் அழகாக, நன்றாக இருக்கும். அதனால், மனநலனை மிக அக்கறையுடன் பார்த்துக்கொள்வதில்தான் என் கவனம் இருக்கும்.

இதற்காக முதலில் நான் செய்வது சோஷியல் மீடியாவிலிருந்து விலகியிருப்பது. அதுவே பாதி மனநலனைக் கொடுக்கும். தினமும் வாக்கிங், எழுதுவது, புதுப்புது ஆடைகள் அணிவது, பேஷனில் கவனம் செலுத்தி என்னை அழகாக வைத்துக் கொள்வது என எனக்குப் பிடித்த வேலைகளைச் செய்து மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன். மனநலம் நன்றாக இருந்தால்தான் என் வேலையை ஒழுங்காகச் செய்யமுடியும்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *