
இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடித்துவரும் படம்,'துரந்தர்'. இதில், மாதவன், சஞ்சய் தத், அக்ஷ்ய் கன்னா, சாரா அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். ஆதித்யா தர் இயக்கும், ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் குழந்தைகள் உள்பட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு உண்ட பின், திடீரென, குழந்தைகள் உள்பட சுமார் 120 பேருக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் தலைவலி ஏற்பட்டடு. இதை அடுத்து, அவர்கள் அருகிலுள்ள எஸ்என்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உணவு விஷமானதால் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். பெரும்பாலானோர் திங்கட்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்றவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார்கள் என்று கூறப்படுகிறது.