
கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி ஷெட்டி நடித்துள்ள படம், ‘சு ஃபிரம் சோ’. ஜே.பி.துமினாட் இயக்கியுள்ள இதில் ஷனீல் கவுதம், சந்தியா, பிரகாஷ் துமினாட் என பலர் நடித்துள்ளனர். ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஜூலை 25-ம் தேதி வெளியானது. கர்நாடகாவில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நகைச்சுவை படம், ஒரு கிராமத்துக்குள் நடக்கும் அமானுஷ்யமான சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படம் 24 நாட்களில் ரூ.104 கோடியை வசூல் செய்துள்ளது. கூலி, வார் 2 படங்களின் பிரம்மாண்டத்துக்கு இடையிலும் இந்தப் படம் வசூல் அள்ளி வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆக இருக்கிறது. பிரபல விநியோகஸ்தர் என்எஸ் ராஜ்குமார் என்பவர் இதன் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.