
இந்தியா சுதந்திரம் அடைந்த மறுநாள், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மதக் கலவரம் மூண்டது. அதில் இந்துக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை மையமாக வைத்து, ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ளார்.
இவர், ‘த காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கியவர். இதில் தர்ஷன் குமார்,பல்லவி ஜோஷி , சிம்ரத் கவுர், மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர் , சாஸ்வதா சாட்டர்ஜி என பலர் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவை, கடந்த 16-ம்தேதி கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. ஆனால், அதற்கு அம்மாநில அரசு மறுத்து தெரிவித்ததால், டிரெய்லர் வெளியீடு பாதியில் நிறுத்தப்பட்டது. போலீஸார் திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.