
புதுடெல்லி: தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என்றும், இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல் என்றும் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை இண்டியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை அடுத்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, "இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல். எனவேதான், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்துள்ளன.