
நாய்க்கடி குறித்த செய்திகள் வராத நாளே இல்லை என்கிற நிலையில் இருக்கிறோம். இன்றும் பலர் நாய் கடித்தால், தொப்புளைச் சுற்றி 16 ஊசிகள் போடுவார்கள் என நினைத்துக்கொண்டு நாய் கடித்தாலும் மருத்துவமனை போகாமல் இருக்கிறார்கள்.
சிலர், நாய்க்கடித்த இடத்தில் மஞ்சளைப்பூசிக் கொண்டு, அசைவத்தைத் தவிர்த்துவிட்டு வீட்டிலேயே இருந்துவிடுகிறார்கள். இன்னும் சிலர், நாய் கடித்தால் மட்டுமே ரேபிஸ் வரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற மக்களிடையே நாய்க்கடித் தொடர்பாக பல நம்பிக்கைகள் உலவிக்கொண்டிருக்கின்றன. அவை சரியா, தவறா என சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர். ராஜேஷ் விளக்குகிறார்.
ரேபிஸ் என்பது ஒருவகை வைரஸ் தொற்று. இது நாய் மூலமாக மட்டுமன்றி குதிரை, பூனை, வவ்வால், கழுதை, நரி போன்ற உயிரினங்கள் மூலமாகவும் பரவக்கூடும்.
ரேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் 100% ரேபிஸ் நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால், இங்குள்ள அனைத்து நாய்க்கும் ரேபிஸ் நோய் இருக்கும் எனக் கூற முடியாது.
நூறில் ஒரு நாய்க்கு ரேபிஸ் நோய் தொற்று இருக்கக்கூடும். என்றாலும், எந்த நாய் கடித்தாலும், பின்விளைவுகளைத் தடுக்க ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதே பாதுகாப்பு.

நாய் கடித்தவுடனே, சிறிதும் நேரம் கடத்தாமல் தண்ணீர் மற்றும் சோப்பைக் கொண்டு கடித்த இடத்தை குறைந்தது பத்து முறையாவது நன்கு கழுவ வேண்டும்.
இவ்வாறு கழுவுவதால் அந்த வைரஸ் நியூட்ரலைஸ் ஆகும். இதை செய்யாமல் மஞ்சள்தூளை மட்டுமே தடவுவது பாதுகாப்பு கிடையாது.
இதன் பிறகு மருத்துவமனைக்குச் சென்று போஸ்ட் எக்ஸ்போஷர் புரொபைலக்சிஸ் ரேபிஸ் தடுப்பூசி (post exposure prophylaxis vaccine) போட வேண்டியது மிக அவசியம்.
நாய் கடித்தும் சிகிச்சை செய்துகொள்ளாதவர்களுக்கு, அதன் எச்சில் வழியாக கடித்த இடத்தில் இருந்து நரம்பு மண்டலத்திற்கும், மூளைக்கும் ரேபிஸ் வைரஸ் பரவக்கூடும்.
முதலில் லேசாக காய்ச்சல் இருக்கும். பிறகு கடித்த இடத்தில் அரிப்பு மற்றும் கடும் வலி ஏற்படக்கூடும். அவை மேலும் தீவிரமடைந்தால் தசைகள் அனைத்தும் இறுகுவதுபோல் தோன்றும். தவிர, பக்கவாதமும் ஏற்படும்.
நாய்க்கடி பாதிப்பு மேலும் தீவிரமானால், ஏரோபோபியா மற்றும் ஹைட்ரோ போபியா (Aerophobia and hydrophobia) ஏற்படக்கூடும்.

ஏரோபோபியா என்றால் குளிர்ந்த காற்று மேலே பட்டால் பயம் ஏற்படும். ஹைட்ரோபோபியா என்றால் தண்ணீரைப் பார்த்தால் பயம் ஏற்படும்.
நாயக்கடியினால் தீவிரமாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால், தொண்டையில் அமைந்துள்ள தசைகள் இறுகி காணப்படுவதால் தண்ணீரை விழுங்க இயலாது.
இதனால் அவர்கள் தண்ணீரைக் கண்டு மிகவும் பயம் கொள்வார்கள். நாய்க்கடியினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மனநிலையை பாதிக்கும்போது, தாங்கள் நாய்போல மாறிவிட்டதாக நினைத்து நாய் போல கத்துவார்கள். ஆனால், அறிவியலின்படி நாய் கடித்தால் நாய்போல் மாற மாட்டார்கள்.
நாயக்கடிக்கும் குளிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. குறிப்பாக நாய் கடித்தால் மேலும் சுத்தமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உண்டு.

பொதுவாக ரேபிஸ் வைரஸ் எச்சில் வாயிலாகத்தான் பரவக்கூடும். அதனால், ரேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கடித்தால் ரேபிஸ் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால், இது மிகவும் அரிதாகவே நடக்கலாம். ரேபிஸ் வைரசினால் பாதிக்கப்பட்ட மனிதன் நீண்ட நாள்கள் உயிருடன் இருக்க முடியாது என்பதே இதற்கானக் காரணம்.
நாய் கடித்தால் எந்த உணவை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், எளிதில் செரிமானமாகும் உணவினை உண்பது நல்லது. அந்த வகையில் நான்வெஜ் சாப்பிட வேண்டாம் என முடிவெடுப்பது அவரவர் விருப்பம். தவிர, உங்களுக்கு ஏதாவது உணவு ஒவ்வாமை இருந்தால், அதுபற்றி மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்டு நடப்பது நல்லது.

இதில் சிறிதளவும் உண்மையில்லை.
ரேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட எந்த நாய் கடித்தாலும் ரேபிஸ் நோய் பரவும். இதில் தெரு நாய், வீட்டு நாய் என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை. வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், அவற்றுக்காக தடுப்பூசிகளை கட்டாயம் போட வேண்டும்.
ஒருமுறை நாய் கடித்தாலும் தடுப்பூசி போட வேண்டும். ஐந்து முறை நாய் கடித்தால் ஐந்து முறையும் தடுப்பூசி போட வேண்டும். ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டால் போதும் என நினைப்பது முற்றிலும் தவறு.
இல்லவே இல்லை. நாய்க்கடிக்கான தடுப்பூசியை, கடித்த நாளன்று, மூன்றாம் நாள், ஏழாம் நாள், 14-ம் நாள், 28-ம் நாள் என ஐந்து டோஸ்களை நாள்கள் தவறாமல் போட்டால்தான், நம் உடலில் ரேபிஸ் வைரஸை எதிர்ப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். முதல் டோஸுடன் நிறுத்திக்கொண்டால் ரேபிஸ் வருவதற்கான வாய்ப்பு உண்டு.

தற்போது உள்ள பெரும்பாலான தடுப்பூசிகள் கைகளில் போடுவதுபோலவே உருவாக்கப்படுகிறது. ரேபிஸ் வைரஸ் தடுப்பூசியையும் கைகளின் தசைகளில் போடுவார்கள். அச்சம் வேண்டாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…