• August 19, 2025
  • NewsEditor
  • 0

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நியூயார்க்கில் நடைபெற்ற 43-வது இந்திய தின அணிவகுப்பில் கை கோர்த்து நடந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஜோடியை ரசிகர்கள் ‘விரோஷ்’ என்று அழைத்து, சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

நியூயார்க்கில் ஆகஸ்ட் 17, 2025 அன்று நடைபெற்ற 43-வது இந்திய தின அணிவகுப்பில், ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா மன்ஹாட்டன் தெருக்களில் கை கோத்து நடந்து சென்றுள்ளனர்.

இந்த தருணத்தைப் பதிவு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கீதா கோவிந்தம்’ படத்தின் 7-வது ஆண்டு விழா

ஆகஸ்ட் 15, 2025 அன்று, ராஷ்மிகா மற்றும் விஜய் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் நிறைவடைந்தன.

இதை முன்னிட்டு, ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஏழு ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படங்கள் இன்னும் என்னிடம் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ‘கீதா கோவிந்தம்’ எப்போதும் என் இதயத்தில் சிறப்பான இடம் பிடிக்கும். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரையும் நினைவு கூர்கிறேன். அவர்கள் அனைவரும் நலமாக இருக்க வாழ்த்துகிறேன்” என்று உருக்கமாகப் பதிவிட்டார். மேலும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.

இதற்கிடையே ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக நீண்ட காலமாகவே தகவல்கள் பரவி வருகின்றன. இந்த அணிவகுப்பு நிகழ்வு, அவர்களின் ரசிகர்களை இதுகுறித்து பதிவிட வைத்திருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *