
மும்பை: சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி. மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். அண்மையில் அவர் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, எதிர்க்கட்சி அணியில் உள்ள நீங்கள், பிரதமர் மோடியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறீர்கள். இதன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பிரியங்கா, “நான் எங்கு செல்கிறேன். என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிய சிலர் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். அவர்களை வெறுப்பேற்ற சில விஷயங்களை செய்கிறேன்” என்று தெரிவித்தார்.