
தனுஷின் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.
பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மெனேன் உள்ளிட்ட பலர் அந்தப்படத்தில் நடித்திருந்தனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியாகி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.
இந்தப் படத்தின் மூலம் கிடைத்த அழகான தருணங்களும், அன்பும், பாசமும் என எல்லாம் நேற்று நடந்ததுபோல இருக்கிறது.
Three years of #thiruchitrambalam ❤️❤️❤️ memories of beautiful moments.. warmth .. bonding feels like yesterday .. thank you @dhanushkraja @nithya_mn #bharathiraja sir @MithranRJawahar @sunpictures & entire team and you dear Audience for pouring love pic.twitter.com/oZE0vSRbDV
— Prakash Raj (@prakashraaj) August 18, 2025
தனுஷ், நித்யா மெனேன் பாரதிராஜா உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…