
சென்னை: சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.