
மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், நடிகை ஸ்வேதா மேனன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சங்கத்துக்கு ஒரு பெண், தலைவராவது இதுவே முதன் முறை. முக்கிய நிர்வாகிகளின் பதவிகளையும் நடிகைகளே கைப்பற்றினர்.
சில வருடங்களுக்கு முன், நடிகர் சங்க நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்த சில முன்னணி நடிகைகள், சங்கத்தில் இருந்து வெளியேறினர். அப்படி விலகியவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று விரும்புவதாக, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்வேதா மேனன் கூறியிருந்தார்.