• August 19, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: காவிரி​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ளதை அடுத்து மேட்​டூர் அணை​யில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இது மேலும் அதி​கரிக்​கப்​படும் என்​ப​தால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. நடப்​பாண்​டில் முதல்முறை​யாக, மேட்​டூர் அணை கடந்த ஜூன் 29-ல் நிரம்​பியது. டெல்டா பாசனத்​துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், நீர் திறப்பு காரணமாக, அணை​யின் நீர் மட்​டம் குறைவதும், காவிரி​யில் வெள்​ளம் ஏற்​படும்​போது, அணை மீண்​டும் நிரம்​புவது​மாக இருந்து வரு​கிறது. இந்​நிலை​யில், அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 6,223 கனஅடி​யாக இருந்த நீர்வரத்து நேற்று காலை​யில் 7,382 கனஅடி​யாக அதி​கரித்​தது. பாசனத்​துக்​காக விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *