• August 18, 2025
  • NewsEditor
  • 0

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து, தங்கம் விலை குறைந்துகொண்டு வருகிறது.

சென்னையில் தற்போது தங்கம் விலை கிராமுக்கு ரூ.9,275 எனவும், பவுனுக்கு ரூ.74,200 எனவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளி விலை ரூ.127 ஆகும்.

சர்வதேச அளவில், தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 3,335.50 டாலர்களுக்கும், வெள்ளி 38 டாலர்களுக்கும் விற்பனை ஆகிறது.

இந்த ஆண்டில் பல முறை புதுப்புது உச்சங்களைப் பெற்ற தங்கமும், வெள்ளியும் இப்போது ஓரளவு நிலையான விலையிலும், குறைந்த விலையிலும் விற்பனையாகி வருகிறது.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

இதற்கான காரணங்களை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

“அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை ஒரு முடிவு எட்டப்படவில்லை. அதனால், உலகளவில் பெரியளவில் எந்த மாற்றமும் இல்லை.

ஒருவேளை, அந்தச் சந்திப்பில் முடிவுகள் எதாவது எட்டப்பட்டிருந்தால், தங்கம் விலைக்கு ஒரு உந்துதல் ஏற்பட்டிருக்கும்.

அப்படி எதுவும் இல்லாததால், தங்கம் விலை இறங்குமுகத்தில் தான் நடைபோட்டு வருகிறது.

அடுத்தது, உலகில் எதாவது மிகப்பெரிய விஷயம் அல்லது சம்பவம் நடந்தால், தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கலாம்.

பெடரல் வங்கியின் முடிவு

இன்னொரு பக்கம், அடுத்த மாதம், அமெரிக்க பெடரல் வங்கி எடுக்க உள்ள வட்டி விகித முடிவைப் பொறுத்து தங்கம் விலையில் மாற்றம் இருக்கலாம்.

வெள்ளி விலையும் தற்போது குறைந்துள்ளது”.

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ‘Vikatan Play‘-ல் ‘Opening Bell Show’ தினமும் காலை கேளுங்கள்.

'Vikatan Play'-ல் 'Opening Bell Show'
‘Vikatan Play’-ல் ‘Opening Bell Show’

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *