• August 18, 2025
  • NewsEditor
  • 0

‘டைனோசர்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பெரிய, செதில்கள் நிறைந்த மிருகங்கள், முன்பு ஒரு காலத்தில் உலவிய காட்சிகள் நம் மனதில் தோன்றும். இந்த பெயர் எங்கிருந்து வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ‘டைனோசர்’ பெயரின் தோற்றம் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

‘டைனோசர்’ என்ற பெயரின் தோற்றம்:

‘டைனோசர்’ என்ற சொல் இன்று பலவகையான பழங்கால ஊர்வனவற்றைக் குறித்திருக்கிறது. 1800களின் தொடக்கத்தில் பிரிட்டனில் புதைபடிவக் கண்டுபிடிப்புகள் அதிகரித்திருக்கின்றன. இந்தப் புதைபடிவங்கள், நவீன ஊர்வனவற்றில் இல்லாத வகையில் முதுகெலும்புகளைக் கொண்டிருந்தன.

டைனோசர் எச்சங்கள்

சர் ரிச்சர்ட் ஓவன் என்பவர் இந்தப் புதைபடிவங்களை ஆய்வு செய்தபோது, அவை தனித்துவமான ஒரு குழுவைச் சேர்ந்தவை என அடையாளம் கண்டுள்ளார்.

1841ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மென்ட் ஆஃப் சயின்ஸ் மாநாட்டில், ஓவன் இந்த வகைப்பாடு குறித்து விவரித்திருக்கிறார். “இத்தகைய தனித்துவமான குணங்கள், ஊர்வனவற்றில் முற்றிலும் புதியவை. இவை மிகப்பெரிய அளவிலான உயிரினங்களால் வெளிப்படுத்தப்பட்டவை.

ஒரு தனித்துவமான ஊர்வனவற்றின் கிளையை உருவாக்குவதற்கு இது போதுமான காரணமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இதற்கு நான் ‘டைனோசோரியா’ என்ற பெயரை முன்மொழிகிறேன்.” என்று கூறியிருக்கிறார்.

ஓவன் இந்தப் பெயரை கிரேக்க மொழியிலிருந்து உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. ‘டைனோஸ்’ (deinós) என்றால் “பயங்கரமான” அல்லது “பிரமிக்கத்தக்க பெரிய” என்று பொருளாம். ‘சவுரோஸ்’ (saúros) என்றால் “பல்லி” என்று பொருள். இதனால், இந்தப் பெயர் நேரடியாக “பயங்கரமான பல்லி” அல்லது “பிரமிக்கத்தக்க பெரிய பல்லி” என்று பொருள்படுகிறது என்று ஃபிலிப் ஜே. கியூரி டைனோசர் அருங்காட்சியகம் தெரிவிக்கிறது.

காலப்போக்கில், ‘டைனோசர்’ என்ற சுருக்கப்பட்ட பெயர் பொதுவான பயன்பாட்டில் வந்தது. அறிவியல் முன்னேறும்போதும் கூட, இந்தப் பெயர் புதைபடிவவியலில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *