• August 18, 2025
  • NewsEditor
  • 0

ஒரு தேநீர் பாத்திரம், பல ஆடம்பர கார்களை விட மதிப்பு மிக்கதாக இருக்க முடியுமா? “தி ஈகோயிஸ்ட்” என்ற இந்த தேநீர் பாத்திரம், உலகின் மிக விலையுயர்ந்த தேநீர் பாத்திரமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் 2016ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ 25 கோடி ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தனித்துவமான தேநீர் பாத்திரத்தை இத்தாலியின் மிலன் நகரைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் புல்வியோ ஸ்காவியா உருவாக்கியிருக்கிறார்.

இந்த பாத்திரம் 18 காரட் மஞ்சள் தங்கத்தால் ஆன அடித்தளத்தையும், தங்க முலாம் பூசப்பட்ட உண்மையான வெள்ளியையும் கொண்டுள்ளது.

இதன் வெளிப்புறம் வைரங்களாலும், தாய்லாந்து மற்றும் பர்மாவிலிருந்து பெறப்பட்ட 386 ரூபி கற்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த தேநீர் பாத்திரத்தின் கைப்பிடி யானை தந்தத்தால் ஆனது. இது மிகவும் நுட்பமாகவும், கவனமாகவும் கையாளப்பட வேண்டிய ஒரு பொருளாகும் என்று கின்னஸ் உலக சாதனை இணையதளம் குறிப்பிடுகிறது.

தி ஈகோயிஸ்ட்” தேநீர் பாத்திரம் தற்போது இங்கிலாந்தில் உள்ள என். சேதியா அறக்கட்டளையின் சித்ரா சேகரிப்பில் (Chitra Collection) பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த பாத்திரம், தேநீரின் கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு கலைப்படைப்பாக உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *