• August 18, 2025
  • NewsEditor
  • 0

லுவலகங்களில் ஆண்-பெண் இருபாலினர் இணைந்து வேலைபார்ப்பது எவ்வளவு இயல்பானதோ, அந்தளவுக்கு இயல்பானது வேலைபார்க்கும் இடங்களில் ஆண், பெண் நட்பும். இந்த அலுவலக நட்பு பரஸ்பரம் மரியாதையுடன் இருக்க இருபாலினரும் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

அலுவலக ஆண், பெண் நட்பு

* ஆண்கள் எல்லோரும் பெண்கள் விஷயத்தில் தவறாகத்தான் இருப்பார்கள் என்கிற பெண்களின் எண்ணமும் தவறு. பெண்கள் என்றாலே மோசமானவர்கள் என்கிற ஆண்களின் எண்ணமும் தவறு. இது அலுவலகச்சூழலை ஆரோக்கியமாக வைத்திருக்காது. சம்பந்தப்பட்டவர்கள் வேலைரீதியாகக்கூட எதிர்பாலினத்தினரிடம் பேச முடியாமல் போகும்.

* உங்களுடைய தனிப்பட்ட இயல்பு தனிமையை நாடுகிற கூச்ச சுபாவமாக இருந்தாலும், அலுவலகத்தில் சிரித்த முகத்துடன் தன்னம்பிக்கையாக இருங்கள். இது உங்கள் மீது மற்றவர்களுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.

அலுவலக ஆண், பெண் நட்பு
அலுவலக ஆண், பெண் நட்பு

* வேலை செய்யும் இடத்தில் ஆண் – பெண் நட்புணர்வுடன் இருப்பது நல்லது; இது அலுவலகச்சூழலை பாசிட்டிவாக வைத்திருக்கும். ஆனால், நண்பர்களாக இருந்தே ஆக வேண்டிய அவசியமில்லை.

* அரசியல், சினிமா, சீரியல் என பொதுவான விஷயங்களைப் பேசுங்கள். அதைத்தாண்டி குடும்பக்கதைகளைப் பகிர வேண்டிய அவசியமில்லை. இது நட்புணர்வைத்தாண்டி, எதிர்பாலினத்தினருடன் பர்சனலாக உங்களை கனெக்ட் ஆக்கி விடலாம். ஆணோ, பெண்ணோ அலுவலகத்தில் இது அவசியமற்றது.

* ’வாங்க’, ’போங்க’ என்று மரியாதைக் கொடுத்து பேசுங்கள். அது உங்கள் மரியாதையையும் காப்பாற்றும்.

சித்ரா அரவிந்த்
சித்ரா அரவிந்த்

* பெண்கள் தங்கள் கணவர்பற்றிய குற்றம் குறைகளை அலுவலக ஆண் தோழமையிடம் பேசாமல் இருப்பது நல்லது. இதுபோலவே, ஆண்களும் தஙள் மனைவிபற்றிய குற்றம் குறைகளை அலுவலக பெண் தோழமையிடம் பேசாமல் இருப்பது நல்லது. மீறிப் பேசினால், இதில் யாரோ ஒருவர் உரிமை எடுக்க ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில் இது தேவையற்ற விஷயம்.

* ஆணோ, பெண்ணோ, யாரோ ஒருவருக்கு ’தங்கள் நட்பு எல்லைக் கடக்க முனைவதை உள்ளுணர்வு அறியும். அப்படி அறிந்தவுடன் உங்கள் செல்ஃப் கன்ட்ரோலை ஆன் செய்துவிடுங்கள். இது உங்கள் மரியாதைக்கு நல்லது.

* ’இவரிடம் பேசுவது நன்றாக இருக்கிறது; இவர் என்னுடைய சோல்மேட்டாக இருந்தால்’ என்று தோன்றினால், அந்த நட்புணர்வை அல்லது அந்த நட்பை கத்தரித்துக்கொள்வது நல்லது.

* வேலைபார்க்கும் இடத்தில் ஆண் – பெண்ணிடையே அறிவார்ந்த உரையாடல் நிகழ்வது சகஜம். அது ஏதோவொரு கட்டத்தில் ’என் மனைவி இப்படி இல்லையே/ என் கணவர் இப்படி இல்லையே’ என்கிற எண்ணத்தையோ அல்லது ஏக்கத்தையோ ஏற்படுத்தினால், அந்த நட்புக்கோ அல்லது அந்த அறிவார்ந்த உரையாடலுக்கோ நாசுக்காக ஒரு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. அதுதான் இரண்டு குடும்பங்களுக்கு நல்லது.

* ஆணோ, பெண்ணோ அலுவலக தோழமைகளிடம் உணர்வுரீதியாக இணைந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஷீல்டு இருப்பது நல்லது. ஒருவேளை, இருவரில் ஒருவர் உணர்வுரீதியாக நெருங்க முயன்றால், ’ஐ இன் குட் ரிலேஷன்ஷிப்’ என்று தெரிவித்து விடுங்கள்.

* நான் மேலே சொல்லியிருக்கிற பாயிண்ட்ஸ் திருமணமான ஆண், பெண்ணுக்கானவை மட்டுமல்ல, திருமணமாகாதவர்களுக்கும் பொருந்தும். இதில் திருமணமாகாதவர்கள் வேலைபார்க்கும் இடத்தில் தன்னுடைய காதலைக் கண்டடைவதும், வாழ்க்கைத்துணையை ஏதோவொரு வகையில் இழந்தவர்கள் தங்களுடைய ’சோல் மேட்’டை கண்டடைவதும் விதிவிலக்கானவை.

* அலுவலகத்தில் ஆண், பெண் நட்புணர்வு மரியாதைக்கோட்டுக்குள் நிற்பதே, பல தேவையற்ற பாலியல் பிரச்னைகள் வராமல் தடுக்கும்’’ என்கிறார் சித்ரா அரவிந்த்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *