
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் தொழிலதிபர் ரூபன் சிங் என்பவர், 15 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்பட பல ஆடம்பர கார்களை வைத்துள்ளார். குறிப்பாக அவரின் தலைபாகை வண்ணத்திலேயே ரோல்ஸ்-ராய்ஸ் கார் இருக்கும் புகைப்படங்கள் இணையவாசிகளிடம் கவனம் பெற்றுள்ளன.
1970-களில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த ரூபன் சிங், இஷர் கேபிடல் என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் மற்றும் ஆல்டேபி ஏ என்ற நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார்.
இவர் தனது ரோல்ஸ்-ராய்ஸ் கார்களின் நிறங்களுக்கு ஏற்றவாறு தலைப்பாகை அணிந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இவரது தனித்துவமான பாணி, ஆடம்பரத்தால் இணையவாசிகளிடம் கவனம் பெற்றுள்ளார். அவரது கார் கலெக்ஷன்களில் மொத்தம் 15 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் தவிர பல ஆடம்பர கார்களும் இவரிடம் உள்ளன. 3.22 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி ஹுராக்கன், 12.95 கோடி ரூபாய் மதிப்புள்ள புனாட்டி வேய்ரான், மற்றும் ஃபெராரி எஃப்12 பெர்லினெட்டா ஆகியவை அவரது தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
மேலும், போர்ஷே 918 ஸ்பைடர் மற்றும் பகானி ஹுவைரா போன்ற அரிய கார்களும் இவரது கார் தொகுப்பில் உள்ளன. பல பில்லியன் டாலர் மதிப்புள்ள கார் தொகுப்பு வைத்திருப்பதால் ரூபன் சிங், கார் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு கவர்ச்சிகரமான நபராக மாற்றியுள்ளார்.