• August 18, 2025
  • NewsEditor
  • 0

2025 செப்டம்பர் 17-ம் நாள் புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் வத்தலகுண்டு ஸ்ரீசுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் ஸ்ரீசுதர்சன மகாஹோமம் நடைபெற உள்ளது. காரியத் தடைகளைத் தகர்த்து உங்கள் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்கும் இந்த ஹோமத்தில் சங்கல்பியுங்கள்!

சுதர்சன ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பெருகி வரும் மக்கள் தொகை, அதனால் உருவாகும் போட்டி பொறாமைகளால் புராண காலம் தொடங்கி தற்போது வரை நல்லவர்களுக்கு தடைகளும் எதிர்ப்புகளும் உருவாகி வருகின்றன. சொந்தம், சுற்றங்களால் உதாசீனப்படுத்தி தொல்லைகளை அனுபவித்து வரும் எல்லோருக்கும் ஆபத்பாந்தவனாக அருளுபவர் ஸ்ரீசுதர்சனர். பிரச்னை, தொல்லை, அச்சம், திருஷ்டி, எதிர்மறை எண்ணங்கள், நோய், தோஷம், நஷ்டம், வம்பு வழக்கு, கடன், எதிரி என ஏகப்பட்ட துன்பங்களை எதிர்த்துப் போராடும் நல்லவர்களைக் காக்கவென்றே திருமாலால் உருவாக்கப்பட்டவர் ஸ்ரீசுதர்சனர். வாழ்வில் முன்னேற முடியாத அளவுக்குத் தடைகள், கஷ்டப்பட்டு முன்னேறினாலும் உண்டாகும் திருஷ்டிகள், இந்த மாதிரியான துன்பத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றும் தெய்வம்தான் ஸ்ரீசுதர்சனர். சுதர்சனரை ஒரு க்ஷணம் நினைத்தாலே போதும் துன்பம் தரும் தீய சக்திகளை அழித்துவிடுவார் என்பது நம்பிக்கை. அதிலும் அவருக்குரிய சுதர்ஸன மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு ஒருபோதும் கவலையோ அச்சமோ அணுக முடியாது என்பது உண்மை. சிறப்பினும் சிறப்பாக ஸ்ரீசுதர்ஸன ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்தால் அவர்களின் வாழ்க்கையே நல்லவிதமாக மாறி தீமைகள் விலகி நன்மைகள் சூழும் என்பது உறுதி.

சுதர்சன ஹோமம்

மந்திரங்களுள் சிறப்பானதான மகாசுதர்சன மந்திரம் சொன்னால் தீமைகள் நீங்கிய வாழ்வை அடைவர் என்பதும் நம்பிக்கை. ஆற்றலைப் பெருக்கி, வெற்றியை அருளும் வழிபாடு சுதர்சன வழிபாடு. வீண் அச்சங்கள், கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், வழக்குகள், நோய்கள், தீராத பகை என அனைத்தையும் நீக்க வல்லது சுதர்சன மகாஹோமம். எண்ணியவைகளை எண்ணியவாறே அருளும் அற்புதமான இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றைச் சொல்லி ஹோமம் செய்வார்கள். இந்த ஹோமத்தில் கலந்துகொள்பவர்களுக்கு சகலவிதமான சத்ருபயம் நீங்கும். கடன் தொல்லை நீங்கி சுபிட்சம் உருவாகும். ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கூடும். அனைத்து விதமான குறைகளும் நிவர்த்தியாகி வாழ்க்கை வளமாகும்.

வெகு சிறப்பான இந்த சுதர்சன ஹோமம் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்களின் நல்வாழ்வுக்காகவும் நடத்தப்படவுள்ளது. வாசகர்கள் வேண்டுதலுக்காக 2025 செப்டம்பர் 17-ம் நாள் புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் வத்தலகுண்டு ஸ்ரீசுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் ஸ்ரீசுதர்சன மகாஹோமம் நடைபெற உள்ளது. காரியத் தடைகளைத் தகர்த்து உங்கள் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்கும் இந்த ஹோமத்தில் சங்கல்பியுங்கள்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சுதர்சன ஹோமம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் அமைந்துள்ளது சுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனம். ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் அரூபமாக அருளும் புண்ணிய க்ஷேத்திரமிது. இங்கு வந்தாலே மன நிம்மதியும் லௌகீக வாழ்வுக்கான அத்தனை தேவைகளும் கிடைத்துவிடும் என்பது நெடுநாள் நம்பிக்கை. 1974-ம் ஆண்டு மந்திராலய பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ கஜயீந்திர சுவாமிகளால் வழங்கப்பட்டு வத்தலகுண்டுவில் தற்போது ஆராதிக்கப்படும் ஸ்ரீராகவேந்திரர் ம்ரித்திகை ரூப வடிவில் எழுந்தருளி பிருந்தாவனம் பக்தர்களைக் காத்து வருகிறார்.

சுதர்சன ஹோமம்

ஸ்ரீராகவேந்திரரின் பக்தரான T.N.சுந்தரராஜ ராவ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு உருவான இந்த பிருந்தாவனத்துக்கு வந்தவர்கள் பெற்ற பலன்கள் அநேகம். அவரது வழியையொட்டி தற்போது அவரது குமாரர் B.S. கோபிநாதன் அவர்களின் இந்த பிருந்தாவனத்தை நிர்வகித்து வருகிறார். லோகத்தின் க்ஷேமத்துக்காகவே இங்கு அன்றாடம் பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. சாந்நித்யம் மிக்க இந்த பிருந்தாவனத்தில் சக்தி விகடன் வாசகர்களின் நலனுக்காக இந்த சுதர்ஸன ஹோமத்தை நடத்தித் தர பிருந்தாவன நிர்வாகம் ஏற்றுள்ளது.

ஸ்ரீசுதர்ஸனருக்கு 16 திருக்கரங்களும் அதில் ஆயுதங்களும் உண்டு. இந்த 16 வித ஆயுதங்களால் நமக்கு உருவாகும் 16 வகையான தீமைகளை அழித்து நாம் பெறவேண்டிய 16 வித செல்வங்களையும் அருளுகிறார். தீய சக்திகளையும் அழித்து நம்மை எப்போதும் காத்து நிற்க, ஸ்ரீசுதர்சனரின் அருள் பெற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்.

சுதர்சன ஹோமம்

ஸ்ரீசுதர்சன ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் சகல சௌபாக்கியங்களும் கைகூடும். ஆரோக்கியம், ஆயுள், ஐஸ்வர்யம், அபிவிருத்தி, மணப்பேறு, குழந்தைப்பேறு உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். தீமைகள், தோஷங்கள் விலகி , சந்தோசம் பெருகும்.

QR CODE சுதர்சன ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு சிறப்பு ரட்சை , அட்சதை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *