
புர்த்வான்: பிஹார் மாநிலத்தை சேர்ந்த சிலர், மேற்கு வங்க மாநிலத்துக்கு புனிதப் பயணம் மேற்கொண்டனர். அங்கிருந்து நேற்று காலை சொந்த ஊர் திரும்பும்போது அவர்கள் வந்த பேருந்து, சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த உள்ளூர் மக்கள் காவலர்களுடன் இணைந்து பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 6 குழந்தைகள் உட்பட 36 பயணிகள் புர்த்வான் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நெடுஞ்சாலையில் சரக்கு லாரியை சட்டவிரோதமாக நிறுத்தியற்காக பஸ் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்கு் பதிவு செய்தனர்.