
சேலம்: திமுக கூட்டணிக் கட்சிகள் யாரும் கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சேலத்தில் தனியார் மின்னணு ஆலை தொடர்ந்து இயங்க வேண்டி முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பாமகவில் தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை, அவர்கள் பேசி தீர்த்துக் கொள்வார்கள். பாமக எனது பழைய வீடு, அவ்வீட்டை பற்றிக் குறை கூற மாட்டேன்.