
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை முன்நிறுத்தியுள்ளனர்.
சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவரைக் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மோடி பதிவு
அதில், “சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார்.
தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடிமட்ட நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார்.
எங்கள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய நகர்வு!
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரைத் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
இவரையே இந்தியா கூட்டணி ஆதாரிக்குமா அல்லது வேறொரு வேட்பாளரை நிறுத்துமா என்பது தற்போது ஆர்வமுடன் கவனிக்கப்படுகிறது.
திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம்… pic.twitter.com/RBxFtKYovi
— Narendra Modi (@narendramodi) August 17, 2025