
மேட்டூர் / தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் 6,408 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6,223 கனஅடியாக குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நீர்திறப்பு விநாடிக்கு 18,000 கனஅடியாகவும், மாலையில் 22,000 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 118.25 அடியாகவும், நீர் இருப்பு 90.70 டிஎம்சியாகவும் இருந்தது.