• August 18, 2025
  • NewsEditor
  • 0

கடைகள்ல, சூப்பர் மார்க்கெட்கள்ல மற்றும் மால்கள்ல கொடுக்கிற பேப்பர் பில்களை ரொம்ப நேரம் கையில வெச்சுக்கிறீங்களா?

அந்த தெர்மல் பேப்பர்கள்ல இருக்கிற ரசாயனம் ஆண், பெண் ரெண்டு பேரோட இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் பாதிக்கும்னு சமீபத்திய சில ஆய்வுகள் எச்சரிக்கை செஞ்சிருக்கு. உண்மையைத் தெரிஞ்சுக்க சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லாவிடம் பேசினோம்.

thermal paper

’’இந்தியா மற்றும் வளர்ந்த நாடுகளில் இருக்கிற கடைகள், சூப்பர் மார்க்கெட்ஸ் மற்றும் பெரிய மால்களில் தரப்படுகிற 90 சதவீத பில்கள் மற்றும் ரசீதுகள் தெர்மல் பேப்பர் கொண்டு உருவாக்கப்படுபவைதான். இந்த தெர்மல் பேப்பரின் மேல், பிஸ்பெனால் ஏ (BPA), பிஸ்பெனால் எஸ் (BPS) என்கிற ரசாயனங்கள் தடவப்படுகின்றன. இவை தெர்மல் பேப்பர்களில் மட்டுமில்லை, எளிதில் தீப்பிடிக்கக்கூடாத பெயிண்ட்களில், குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகளில், வீட்டில் இருக்கும் சோபாக்களின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் நமக்கு ஏற்படுகிற பாதிப்பு என்னவென்றால், நேரடியாக இந்த தெர்மல் பேப்பர்களை பயன்படுத்தும்போதோ, சிறிது நேரம் கையில் வைத்திருந்தாலோ, அதில் இருக்கிற ரசாயனங்கள் நம் உடலில் எளிதில் ஊடுருவி விடுகிறது. கையில் நீண்ட நேரம் வைத்திருந்தால் உடலில் ஊடுருவி ரத்தத்தில் கலந்து விடுகிறது. இந்த ரசாயனங்கள் நம் உடலில் பரவிய பிறகு சுமார் பத்து மணி நேரம் வரை ரத்தத்தில் அதிகமாக இருக்கும். பின் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிறுநீர் மூலம் வெளியேறிவிடும்.

Super market
Super market

தொடர்ந்து தெர்மல் பேப்பரை தொடுகிற சூழலில் இருப்பவர்களுக்கு, உடலில் உள்ள தீங்கு செய்யக்கூடிய பாக்டீரியாக்களின் அளவு அதிகமாகவும், நல்ல பாக்டீரியாவின் அளவு குறையவும் வாய்ப்புள்ளது. உடல் பருமன், கல்லீரலில் கொழுப்பு, ரத்த கொழுப்பு அளவுகளில் சீர்கேடு, மகப்பேறின்மை போன்ற பாதிப்புகளும் வர வாய்ப்பிருக்கிறது. தவிர, உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளின் செயல்களையும் பாதிக்கிறது. முக்கியமாக, ஆண், பெண் இருவருடைய இனப்பெருக்க நலனையுமே பாதிக்கிறது.

ஆண்களைப் பொறுத்தவரையில் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் நிலையிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆண்கள் உடலில் உள்ள விந்தணு செல்களான லேடிக், செர்ட்டோலி மற்றும் ஜெர்ம் செல்களை (Leydig cells, Sertoli cells, and germ cells) பாதித்து டெஸ்ட்டோஸ்டீரான் உற்பத்தியைக் குறைக்கிறது. விந்தணுக்களின் அளவு மற்றும் உருவ அமைப்பை பாதிக்கிறது. விந்தணுக்கள் முன்னோக்கி செல்வதிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவை மட்டுமா, விந்தணுக்களுக்குள் இருக்கும் டி. என்.ஏ-வையும் தெர்மல் பேப்பரில் இருக்கிற ரசாயனங்கள் பாதிக்கின்றன.

டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.
டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா

பெண்களைப் பொறுத்தவரையில், இந்த பிஸ்பெனால் ரசாயனம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் போலவே இருப்பதால் ஈஸ்ட்ரோனுக்கு எதிராக செயல்பட்டு, கருமுட்டை வளர்ச்சி நடக்காமல் தடுத்து விடுகிறது. தவிர, கருமுட்டை வெளிவராமல் கருமுட்டை சிதைவுறுதல் நடைபெறவும் வாய்ப்புள்ளது.

தெர்மல் பேப்பரைத் தொட்ட கையை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

தேவையில்லாமல் அடிக்கடி இந்த தெர்மல் பேப்பர்களை எடுத்துப் பார்ப்பதும், சேமித்து வைப்பதும், குப்பையாக பர்ஸுகளில் குவித்து வைப்பதையும் தவிர்த்துவிட்டு அவற்றை குப்பைத்தொட்டியில் போடுவது நல்லது.

ஆல்கஹால் சானிடைசர் பயன்படுத்துவது அதிகமாக பிஸ்பெனாலை உள்வாங்கும் தன்மையை ஏற்படுத்துகிறது. கைகள் வழவழப்பாகவும், ஈரப்பதத்துடனும் இருக்கும்போது வேகமாக பிஸ்பெனாலை உள்வாங்கும் தன்மை கொண்டது.

தெர்மல் பேப்பர்களைத் தொடுகிற பணியில் இருப்பவர்கள் கையில் க்ளவுஸ் போட்டுக்கொள்ளலாம்.

’பிஸ்பெனால் ஃப்ரீ’ தெர்மல் பேப்பர்களை பயன்படுத்தலாம்.

டிஜிட்டல் பில்களுக்கு மாறலாம். செல்போன் மூலம் விவரங்களை அறிந்து கொள்ளலாம்’’ என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *