• August 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தேர்​தல் ஆணைய முறை​கேடு தொடர்​பாக பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்த 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்​கம் நடத்​தப்​படும் என்று தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார். தமிழ்​நாடு காங்​கிரஸ் மாவட்ட தலை​வர்​கள் கூட்​டம் சென்னை சத்​தி​யமூர்த்​தி பவனில் நேற்று நடை​பெற்​றது.

தமிழக காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தலை​மை​யில், தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தேசிய செய​லா​ளர் சூரஜ் ஹெக்டே ஆகியோர் முன்​னிலை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில் தமிழகத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் செயல்​பாடு​கள், தேர்​தலுக்கு தயா​ராவது குறித்து ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது இக்​கூட்​டத்​தில், தேர்​தல் ஆணை​யத்​தின் முறை​கேடு​கள் நடந்​த​தாக ராகுல்​காந்தி வெளி​யிட்ட தரவு​கள் குறித்து தேசிய செய​லா​ளர் பிர​வீன் சக்​ர​வர்த்தி காங்​கிரஸ் நிர்​வாகி​களுக்கு தமிழில் விளக்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *