• August 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் சுயசான்று அடிப்​படை​யில் கட்​டிட அனு​மதி பெறும் நடை​முறை​யில், விண்​ணப்​பிக்க தகு​தி​யானவர், விண்​ணப்​பிக்​கும் முறை, கட்​டிடத்தை சுற்றி விட​வேண்​டிய இடம் தொடர்​பான விதி​களை திருத்தி அரசிதழில் தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, ஒருங்​கிணைந்த கட்​டிட விதி​களில் திருத்​தம் செய்து வெளி​யிடப்​பட்ட அறிவிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஒருங்​கிணைந்த கட்​டிட விதி​களில், சுய​சான்று குடி​யிருப்பு கட்​டிடம் என்​பது 2,500 சதுரஅடி மனை பரப்​பில் 3,500 சதுரஅடி வரை​யில் குடி​யிருப்பு கட்​டிடம் அதாவது, அதி​கபட்​சம் ஒரு தரைதளம் மற்​றும் முதல் தளம் அல்​லது, ஒரு தரைகீழ் தளம், இரண்டு தளங்​கள் அதி​கபட்​சம் 10 மீட்​டர் உயரத்​தில் கட்​டப்​படும் கட்​டிட​மாக இருக்க வேண்​டும். இந்த கட்​டிடம் கட்​ட​வோ, மறு கட்​டு​மானம் செய்​யவோ அனு​மதி பெறு​வதற்​கு, நில உரிமை​யாளர், நில குத்​தகை​தா​ரர் அல்​லது பொது அதி​காரம் பெற்​றவர் விண்​ணப்​பிக்க தகு​தி​யானவர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *