
சென்னை: தருமபுரி மாவட்டத்தை திமுக புறக்கவில்லை என்றும், புறக்கணித்திருந்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100க்கு 100 சதவீத வெற்றி சாத்தியமாகி இருக்குமா என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில்தான் தருமபுரி மாவட்டத்தை முதல்வர் புறக்கணித்து வருகிறார் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மேலும், தருமபுரி மாவட்டம் மீதான வன்மத்தைக் கைவிடுங்கள்; காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துங்கள் என்றும் அன்புமணி ராமதாஸ் சொல்லியிருக்கிறார்.