
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, நாளை (18.08.2025) முதல் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 38 ரயில்கள், கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று எல். முருகன் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (17 ஆகஸ்ட் 2025) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன், விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மனுக்கள் மக்களிடமிருந்து தமக்கு வந்ததாகவும், அதை தாம் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கவனத்துக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் 38 ரயில்கள் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவித்தார்.