• August 17, 2025
  • NewsEditor
  • 0

பீகார் மாநிலம், சாசரம் மாவட்டத்தில் தனது வாக்காளர் அதிகார யாத்திரையை இன்று தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. பீகார், மகாராஷ்டிரா என நாட்டில் எங்கு வாக்கு திருடப்பட்டாலும் அதை அம்பலப்படுத்துவேன் என சபதமேற்றுள்ளார்.

“திருடர்களை மக்கள் முன் நிறுத்துவோம்” – Rahul Gandhi

“தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்பது மொத்த நாட்டுக்குமே தெரியவந்துள்ளது. வாக்குகள் எப்படித் திருடப்படுகின்றன என்பதை நாட்டு மக்கள் அறியாமல் இருந்தார்கள். இப்போது நாங்கள் அதை பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவாக விளக்கிவிட்டோம்.

தேஜஸ்வி யாதவ் கார் ஓட்ட, தொண்டர்களை நோக்கி கை அசைக்கும் ராகுல் காந்தி

இனி எப்போது திருட்டு நடந்தாலும் அது பீகார், மகாராஷ்டிரா, அசாம், வங்காளம் என எந்த பகுதியாக இருந்தாலும் சரி நாங்கள் திருடர்களைப் பிடித்து மக்கள் முன் நிறுத்துவோம்.” எனக் கூறியுள்ளார்.

SIR = சதி

பீகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) ஒரு ‘சதி’ என்ற அவர், வாக்கு திருட்டு அம்பலமாகிவிட்டதனால் இனி எதிர்க்கட்சிகள் தேர்தல்களைத் திருடுவதற்கு எதிராக போராடும் எனக் கூறியுள்ளார்.

“நான் இந்த மேடையில் கூறுகிறேன் விதன சபா(சட்டமன்றம்), லோக் சபா (நாடாளுமன்றம்) தேர்தல்கள் நாடுமுழுவதும் திருடப்பட்டுள்ளன. அவர்களது சதி பீகாரில் SIR மூலம் புதிய வாக்குகளை இல்லாமல் ஆக்கிவிட்டு போலிகளால் நிரப்புவதுதான். இந்தத் தேர்தலை திருட அனுமதிக்கமாட்டோம் என உரக்கச் சொல்லவே நாம் இங்கு வந்துள்ளோம்” என்றுள்ளார்.

Voter Adhikar yatra
Voter Adhikar yatra

மேலும், “பீகார் மக்கள் இந்த தேர்தலை திருட அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் எழை மக்களுக்கு இருப்பது ஒரே ஒரு வாக்குதான்” எனப் பேசியுள்ளார்.

மோடியும், தேர்தல் ஆணையமும் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர்

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், வாக்காளர் பட்டியல் விஷயத்தில் பிரதமர் மோடியும் தேர்தல் ஆணையமும் மக்களை ஏமாற்ற நினைப்பதாகக் குற்றம் சாட்டினார்.

“நரேந்திர மோடி பீகார் இளைஞர்களின் வாழ்க்கையை அழிப்பதில் தீவிரமாக உள்ளார். மோடி படிப்பறிவில்லாதவர்களைத் தனக்காக கைதட்ட வைத்து அரசியல் செய்கிறார். ஆனால் நாம் எல்லோர் கையிலும் வேலை கொடுக்கும் அரசியலைச் செய்கிறோம். அதற்காகத்தான் நாம் இங்கு நிற்கிறோம். தேர்தல் ஆணையமும் மோடியும் பீகார் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். பீகார் மக்களை வலிமையற்றவர்கள் என எண்ணாதீர்கள்” என பகிரங்கமாகப் பேசினார் தேஜஸ்வி.

பொறுப்பேற்காத தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் இருந்த/இருக்கின்ற சிக்கல்கள் எல்லாம் “உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள்” கேட்கப்படும் சமயத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

மேலும் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்தபோதே கட்சிகளும் அவற்றின் பூத் கமிட்டி உறுப்பினர்களும் பிழைகளைக் கண்டறிய தவறிவிட்டதாகக் கூறியுள்ளது,

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *