
டெல்லியை சேர்ந்த 39 வயது நபர் அவது தாயை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தாயின் முந்தைய கால உறவுக்காக தண்டிக்கும் விதமாக இவ்வாறு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் கூறியிருப்பதன்படி, 65 வயது மூதாட்டி தனது மகளுடன் (25) ஹௌஸ் காசி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
கடந்த ஜூலை 17ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் அவரது கணவர் மற்றும் இளைய மகளுடன் சௌதி அரேபியாவுக்கு பயணம் செய்துள்ளார்.
அப்போது குற்றவாளி (மகன்) அவரது தந்தைக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, உடனடியாக டெல்லி வரக் கூறியிருக்கிறார். அவரிடம் தாயை விவாகரத்து செய்யுமாறு கூறியதுடன் தனது குழந்தை பருவத்தில் அவருக்கு (தாய்க்கு) இருந்த முறைகேடான உறவு பற்றியும் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 1ம் தேதி இந்தியா திரும்பிய தாயை கடுமையாக தாக்கியிருக்கிறார் மகன். தனது குழந்தைப் பருவத்தை சீரழித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

வீட்டிலிருந்து வெளியேறி சில நாட்களுக்கு தனது மூத்த மகளின் வீட்டில் தங்கியிருந்துள்ளார் அந்தப் பெண்.
ஆகஸ்ட் 11ம் தேதி அவர் வீடுதிரும்பிய பின்னரும் வன்முறை தொடர்ந்துள்ளது. அன்று தனியறையில் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, “இது முந்தைய உறவுக்கான தண்டனை” எனக் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 14ம் தேதி மீண்டும் இதேப்போல நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் குறித்து மறுநாள் தனது இளைய மகளிடம் முறையிட்டுள்ளார் தாய். மகள் அளித்த தைரியத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பெண்மணி.