
சசாரம்: 'தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து தேர்தல்களைத் "திருடுகிறது" என்பதை முழு நாடும் இப்போது அறிந்திருக்கிறது. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் மூலம் பிஹார் சட்டமன்றத் தேர்தல்களைத் திருட சதி நடக்கிறது' என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பிஹாரின் சசாரத்தில் இருந்து தனது 1,300 கி.மீ 'வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ தொடங்கினார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “பிஹாரில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடைபெறவுள்ள 'வாக்காளர் அதிகார நடைபயணம்' அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர்களை நீக்கி, சேர்த்து வாக்குகளை "திருட" ஒரு "புதிய சதி" நடக்கிறது.