• August 17, 2025
  • NewsEditor
  • 0

பீகாரின் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கிறது.

இந்தத் திருத்தத்தை எதிர்த்து பீகாரில் இன்று முதல் 16 நாள்களுக்கு நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு முதன்முறையாக இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதில் அளித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

அனைத்து கட்சிகளும் சமம்

இதற்காக கூட்டப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் ஞானேஷ் குமார், “இந்திய அரசியல் சாசனத்தின் படி, இந்தியாவில் 18 வயது அடைந்த அனைவரும் வாக்காளர்கள். அவர்கள் வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலம், ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிறக்கிறது என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும்.

பிறகு எப்படி இந்த அரசியல் கட்சிகள் மத்தியில் தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டும்.

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, அனைத்து அரசியல் கட்சிகளும் சமம் ஆனது தான்.

எப்படி ஓட்டுகளைத் திருட முடியும்?

யார் எந்தக் கட்சியைச் சேர்ந்திருந்தாலும், தேர்தல் ஆணையம் அதன் அரசியல் சாசனக் கடமையில் இருந்து பின்வாங்காது.

மக்களவை தேர்தலில், கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் ஏஜென்டுகள், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பூத் ஏஜென்டுகள் பணிபுரிந்தனர்.

இப்படியான வெளிப்படையான நடைமுறையில், இவ்வளவு மக்களுக்கு முன்பு, ஓட்டுகளைத் திருட முடியுமா?” என்று பேசியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *