
சேலம்: தமிழகம் உள்பட மாநிலங்களில் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்துடன், திராவிட இயக்கங்களோடு கம்யூனிஸ்ட்கள் கொள்கை உறவு கொண்டுள்ளன. இந்த உறவு எப்போதும் நீடிக்க வேண்டும். அப்போதுதான் தலைமுறைகள் காப்பாற்றப்படும்.