
சென்னை: நெல்லையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அமித் ஷா பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக சார்பில் தென் மாவட்டங்களில் உள்ள பாஜகபூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு ஆக. 17-ம் தேதி (இன்று) நெல்லையில் நடைபெறும் என அறிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் நேற்று முன்தினம் மாலை காலமானார்.