
சென்னை/ திண்டுக்கல்: தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகளின் வீடுகள், அவர்களது குடும்பத்தினருக்கு சொந்தமான ஜவுளி மில் உட்பட திண்டுக்கல், சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியின் வீடு திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ளது. அவரது வீட்டுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை 7.15 மணி அளவில் வந்தனர். அப்போது, அமைச்சர் பெரியசாமி, வீட்டில் இருந்தார். துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் போலீஸார், வீட்டின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள், வீட்டுக்குள் நுழைந்து தீவிர சோதனை நடத்தினர்.