
விழுப்புரம்: பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் நாளை (ஆக. 17) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அன்புமணி குறித்து முக்கிய முடிவை நிறுவனர் ராமதாஸ் எடுக்கக் கூடும் என எதிர்பார்க் கப்படுகிறது.
இந்நிலையில் ராமதாஸின் மனைவியும், அன்புமணியின் தாயாருமான சரஸ்வதி அம்மையாரின் பிறந்த தினம் நேற்று என்பதால், அவருக்கு ராமதாஸ் மற்றும் அவரது மகள்களின் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.