• August 16, 2025
  • NewsEditor
  • 0

பேபி ஏபி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் டெவால்ட் பிரேவிஸ், டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கெதிரான கோலியின் சாதனையை வெறும் மூன்றே போட்டிகளில் முறியடித்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் ஆட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.

இதில், ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டிம் டேவிட்டின் (83 ரன்கள்) அதிரடியால் 178 குவித்த ஆஸ்திரேலியா, 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

அடுத்து ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெவால்ட் பிரேவிஸின் (125) அதிரடி சதத்தால் 218 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா, 53 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்த நிலையில், டி20 தொடரின் வெற்றியாளர் யார் என்பதை நிரூபிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 49 ரன்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில், பிரேவிஸ் 26 ரன்களில் 53 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை 172-ஆக உயரப் பங்காற்றினார்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் விக்கெட்டுகள் விழுந்தால் மெக்ஸ்வெல்லின் அதிரடி அரைதத்தால் (62 ரன்கள்), ஒரு பந்தை மிச்சம் வைத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.

மூன்று போட்டிகளையும் சேர்த்து 150 ரன்கள் குவித்த டிம் டேவிட் தொடர் நாயகன் விருதை வென்றார்.

அதேசமயம், இத்தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 180 ரன்களுடம் முதலிடம் பிடித்த பிரேவிஸ், ஆஸ்திரேலியாவுக்கெதிராக அதன் சொந்த மண்ணில் அதிக டி20 சிக்ஸ் அடித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

விராட் கோலி

இதுவரை ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கெதிரான அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் 12 சிக்ஸுடன் (10 போட்டிகளில்) விராட் கோலி முதலிடத்தில் இருந்தார்.

இவ்வாறிருக்க, இந்தத் தொடரில் முதல் சிக்ஸ் எதுவும் அடிக்காமல் 2 ரன்னில் அவுட்டான பிரேவிஸ், இரண்டாவது போட்டியில் 8 சிக்ஸும், மூன்றாவது போட்டியில் 6 சிக்ஸும் அடித்து கோலியை இரண்டாமிடத்துக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார்.

பிரேவிஸ் கடந்த ஐ.பி.எல் சீசனில் பாதியில் சி.எஸ்.கே (CSK) அணியில் இணைந்து அதிரடியாக ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *