
‘மதராஸி’ படத்தின் கதைக்களம் உள்ளிட்ட விவரத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்துள்ளார். அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘மதராஸி’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கான பேட்டிகளை அளிக்க தொடங்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் உள்ளிட்ட சில சுவராசியங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஏ.ஆர்.முருகதாஸ், “‘மதராஸி’ படத்தின் களம் காதலை மையப்படுத்தி நடக்கும் பெரிய ஆக்‌ஷன் கதையாகும். ‘கஜினி’ போலவே இதுவும் ஒரு பழிவாங்கும் கதைதான். ஆனால், இதில் காதல் தான் மையப்புள்ளியாக இருக்கும்.