
புதுடெல்லி: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையே நடந்த பேச்சுவார்த்தையை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள இந்தியா, பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்தள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான சந்திப்பை இந்தியா வரவேற்கிறது. அமைதியை நோக்கிய அவர்களின் தலைமை மிகவும் பாராட்டத்தக்கது. இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்தியா பாராட்டுகிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும். உக்ரைனில் ஏற்படும் மோதலுக்கு விரைவில் முடிவு காண உலகம் விரும்புகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.