
சென்னை: முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற இருக்கின்றன.
இதில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான 25 வகையான போட்டிகள், மண்டல அளவிலான 7 வகை போட்டிகள், மாநில அளவிலான 37 வகை விளையாட்டுப் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள், 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள், 15 வயது 35 வயது வரையிலான பொதுப் பிரிவினர், அரசுப் பணியாளர்கள் மற்றும் அனைத்து வயது மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கவுள்ளனர்.