
2025 ஆகஸ்ட் 29-ம் தேதி மண்ணிவாக்கம் மதனபுரம் ஏரிக்கரை ஸ்ரீநாகவள்ளி அம்மன் மற்றும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஜம்புகேஸ்வரர் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக.
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
நாக வடிவில் எழுந்தருளிய அம்மன்!
சென்னையின் பழைமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் இப்பகுதி மக்கள். நாக வடிவில் எழுந்தருளிய அம்மனுக்கு இங்கே ஆலயம் எழுப்பி வழிபட அது இப்போது இப்பகுதியில் பிரபல பரிகார ஆலயமாக விளங்கி வருகிறது. வண்டலூரில் இருந்து படைப்பை செல்லும் வழியிலும் தாம்பரம் முடிச்சூர் சாலை முடியும் இடத்திலும் இந்த ஆலயம் மதனபுரம் ஏரிக்கரையில் அமைந்துள்ளது.
நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட தோஷங்கள் நீங்கி திருமண வரம் மற்றும் பிள்ளைப்பேறு உள்ளிட்ட மங்கல வரங்கள் பெற்ற பெண்கள் ஏராளம் என்கிறார்கள் பக்தர்கள். இங்குள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றும் ஜம்புலிங்கேஸ்வரர் இருவருமே ஆயுள்; ஆரோக்கியம்; ஐஸ்வர்யம் அருளும் வரப்பிரசாதிகளாக விளங்கி வருகின்றனர்.
குறிப்பாக நாகவள்ளி அம்மனை வேண்டிக்கொண்டால் உங்கள் குழந்தைகளின் நலன் மற்றும் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். தீய சக்திகளின் தொந்தரவு விலகவும், கண் திருஷ்டி உள்ளிட்ட எதிர்மறைச் செயல்கள் தீரவும், கடன்; நோய்; நஷ்டம்; தோல்வி யாவும் விலகவும் இங்கு வந்து வேண்டிக் கொண்டு பலன் பெற்றவர்கள் ஏராளம் என்கிறார் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ. கிஷோர்.

எண்ணிய வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும், வாழ்வின் கஷ்டங்கள் நீங்கவும் நாகவள்ளி அம்மனுக்கு விசேஷ பால் அபிஷேகம் செய்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. ஆடி மற்றும் நவராத்திரி விழாக்கள் இங்கு விசேஷம். புகழ்பெற்ற இந்த ஆலயத்தை வெகு நேர்த்தியாக நிர்வகித்து வருபவர் பரம்பரை அறங்காவலர் திரு. விநாயகம்.
சிறப்புகள் மிக்க இந்த நாகவள்ளி அம்மன் ஆலயத்தில் விளக்கு பூஜை செய்து வேண்டிக்கொண்டால் வேண்டிக்கொண்ட அத்தனை வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது உறுதி. ‘எங்கே விளக்கேற்றி வழிபட்டாலும் அங்கே அந்த தீப ஜோதியில் நான் தோன்றி அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவேன்’ என்பது அம்பிகையின் திருவாக்கு. அதனால் 2025 ஆகஸ்ட் 29-ம் தேதி மண்ணிவாக்கம் மதனபுரம் ஏரிக்கரை ஸ்ரீநாகவள்ளி அம்மன் மற்றும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஜம்புகேஸ்வரர் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம்.

அன்னை நாகவள்ளி அம்மன் அருளால் வளமும் நலமும் பெற்றவர்கள் அநேகம். எனவே உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.
அனுமதி இலவசம்!
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவுக்கு: 044-66802980/07